புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. தடுப்பூசியால் சற்று ஓய்ந்த கொரோனா பாதிப்புகள் ஐரோப்பா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.
இந்நிலையில் புதிய வகையான கொரோனா ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.
இதையடுத்து இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் புதிய வகை Omicron வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
இதுகுறித்து காலம் செம்பிள் கூறியதாவது, இது பெரும் அழிவை ஏற்படுத்தாது. சிலர் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையே மிகைப்படுத்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
மேலும் தடுப்பூசியால் கிடைக்கிற எதிர்ப்பு சக்தி இன்னும் கடுமையான நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும்.
அதுமட்டுமின்றி இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவது குறைவு என்று தெரிவித்துள்ளார்.