பிரான்ஸில் கொரோனா வைரஸ் (Covid19) தொற்றினால் 24 மணிநேரத்தில் 33,464 பேர் பாதிக்கப்பட்டதோடு 43 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 75 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 777 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 17ஆயிரத்து 371 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 1,499 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரான்ஸில் 8,917 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 70 லட்சத்து 80 ஆயிரத்து 598 பேர் குணமடைந்துள்ளனர்.