அரசாங்கம், தான் விரும்பிய யுத்த வெற்றிக்காக முழு நாட்டையும் அடகு வைக்க தயங்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (D. Siddarthan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதன் காரணமாகத் தான் இந்த நாடு இன்று வல்லரசு அதிகார போட்டிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் தான் இந்த நாடு ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.