கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் (Covid-19) 1,018 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17 இலட்சத்து 53 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 ஆயிரத்து 385 பேர் மரணமடைந்துள்ளனர். கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 24 ஆயிரத்து 329 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 545 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,251 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 99 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.