கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 1,455 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17 இலட்சத்து 49 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29ஆயிரத்து 346 பேர் மரணமடைந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 24ஆயிரத்து 942 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 545 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,521 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 95 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.