எம்மில் பலர் கழிவறையில் தான் அதிக நேரத்தினை செலவு செய்கின்றனர்.
அப்படியானவர்களுக்கு தான் இந்த பதிவு, அதிலிருக்கும் ஆபத்துக்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுஙக்கள்.
மொபைல் பாவிக்க இடமே இல்லாதது போல கழிவறையில் உட்கார்ந்தபடி பயன்படுத்தி கேம்களை விளையாடுவது, புத்தகங்களை படிப்பது, இன்ஸ்டா பயன்படுத்துவது, மெயில் பார்ப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஈடுபட்டு இன்றைய தலைமுறையினர் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
கடுமையான உடல்நல கோளாறுகள் ஏற்பட இந்த தேவையற்ற பழக்கம் காரணமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் செலவிட கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உண்மையில்10 நிமிடங்களுக்கும் குறைவாக டாய்லெட்டில் நேரம் செலவழிக்கும் பழக்கம் சிறந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.மொபைலின் மேற்பரப்பு ஒரு கழிவறையை விட அதிக கிருமிகளை கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அதை கழிப்பறைக்கு எடுத்து சென்று பயன்படுத்துவதால் மொபைல் ஃபோன் இன்னும் பல மடங்கு கிருமிகளை பெறுகிறது.
ஆறில் 1 ஃபோனில், குறிப்பிட்ட நபருக்கே தெரியாமல், அதன் மேற்பரப்பில் மலப் பொருட்களின் தடயங்கள் இருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது. கழிவறையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் ஏற்படுமாம்.
ஒரு நபர் தனது நேரத்தை டாய்லெட்டில் எவ்வளவு நேரம் செலவிடுகிறாரோ, அவ்வளவு நேரம் ரத்தம் இந்த மலக்குடல் நரம்புகளில் குவிந்து மூல நோயை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து கொண்டிருப்பது ஆசனவாயில் வலி, வீக்கம் அல்லது ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
சராசரியாக 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடுவது ஆசனவாயை சுற்றி இருக்கும் ரத்த நாளங்களையும் வீங்க செய்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே உடல் ஆரோக்கியத்தில் அக்கரை கொண்டவர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவு செய்வதை குறைத்து விடுங்கள்.