குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும்?

உடலுக்கு மிக முக்கிய தேவை உணவு. அதுவும் இந்த குளிர்காலங்களில் நாம் சரியான உணவுகளையே தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.

இந்த பருவத்தில் தான் பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் புதிதாகக் கிடைக்கும். அவற்றை சரியான அளவில் நாம் எடுத்துக்கொண்டால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும்.  ஆம் இந்த குளிர்காலங்களில் நமக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பைரிடாக்சின் என அழைக்கப்படும் வைட்டமில் பி6 நிறைந்த பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

ஏனெனில் இந்த காலக்கட்டங்களில் ஏற்படும் உடல் தொந்தரவு மட்டுமின்றி, மனநிலையை ஒழுங்கு படுத்தி மனச் சோர்வின் அறிகுறியை குறைக்கவும் இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு பெரிதும் பயன்படுகின்றது.

கேரட்

குளிர்காலத்தில் மிகவும் எளிதாக கிடைக்கும் கேரட் வைட்டமின் பி6 நிறைந்த காய்கறிகளில் முக்கியமானதாகும்.

ஒரு கேரட் ஒரு கிளாஸ் பாலைப் போலவே வைட்டமின் பி6 ஐ வழங்குவதுடன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களும் காணப்படுகின்றது.

பால்

அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படும் உணவு பொருளான பாலில், வைட்டமின் பி6 அதிகமாகவே இருக்கின்றது.

வாழைப்பழம்

உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் வாழைப்பழத்தினை தினமும் சாப்பிடுவது நல்லது. இதிலும் வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றது.

கீரை

 

இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த கீரையும் இந்த குளிர்காலங்களில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாகும். தினசரி உணவில் சேர்ப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.

கோழி கல்லீரல்

கோழி கல்லீரலிலும் வைட்டமின் பி6 தவிர, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.

முட்டை

தற்போது பெரும்பாலான நபர்களின் காலை உணவாக தெரிவு செய்யப்படும் முட்டை, குளிர்காலங்களில் நமது உடலை சூடாக வைத்துக்கொள்கின்றது. இதனை இந்த காலங்களில் ஆம்லெட்டாகவே அல்லது ஆப்பாயிலாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம்.

பச்சை பட்டாணி

இந்த குளிர்கால மாதங்களில் பரவலாக கிடைக்கும் காய்களில் ஒன்றாக இருக்கும் பச்சை பட்டாணியில், பி6 வைட்டமின் அதிக அளவுடன் இருக்கின்றது. பச்சை பட்டாணியை சாலட்களில் அல்லது கேரட் அல்லது உருளைக்கிழங்குடன் வதக்கிய சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE