எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் சீமெந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிடம் டொலர் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சீமெந்தை இறக்குமதி செய்யும் வழியில்லை. நாட்டிற்கு தேவையான சீமெந்தில் 65 வீதம் மாத்திரமே கையிருப்பில் உள்ளது எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.