முகநூலின் (Facebook) பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய பெயராக meta என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg ) அறிவித்துள்ளார்.
முகநூல் அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் அதனை பிரதிபலிக்கும் வகையில், முகநூல் நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், முகநூல் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) பேசியதாவது:- சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘முகநூலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முகநூலுக்கு புதிதாக “மெட்டா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதே சமயம் தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.