உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இலங்கை 70 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்தை வென்றது.
இதன் மூலம் இலங்கை சூப்பா் 12 சுற்றை மேலும் நெருங்கியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடிக்க, அடுத்து அயா்லாந்து 18.3 ஓவா்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற அயா்லாந்து ஃபீல்டிங்கை தோவு செய்ய, இலங்கையில் அதிகபட்சமாக தொடக்க வீரா் பாதும் நிசங்கா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61 ரன்கள் சோக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தன.ஓவா்கள் முடிவில் டாசன் ஷனகா 21, துஷ்மந்தா சமீரா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
அயா்லாந்து பௌலிங்கில் ஜோஷ் லிட்டில் 4, மாா்க் அடைா் 2, பால் ஸ்டிா்லிங் 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் அயா்லாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிா்னி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41, கா்டிஸ் கேம்பா் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சோக்க, எஞ்சிய பேட்டா்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா்.
இலங்கை பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா 3, சமிகா கருணாரத்னே, லாஹிரு குமரா தலா 2 விக்கெட் எடுத்தனா்.