கனடாவில் தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் அணுகு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதைப்பற்றின முக்கிய உத்தரவு ஒன்றினை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கனடாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் அனைவரும் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவர்.
இதனால் அக்டோபர் 29ம் திகதிக்குள் ஊழியர்கள் அனைவரும் முழு தடுப்பூசி செலுத்திய ஆதாரத்தை பதிவு செய்ய வேண்டும். அதேபோல விமானம்,ரயில் மற்றும் கப்பலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையானது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.