அடுத்தாண்டு ஐபிஎல்லில் களமிறங்கும் 2 புதிய அணிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளது இவர்களா? கசிந்த தகவல்

ஐபிஎல்லில் அடுத்தாண்டு இரண்டு புதிய அணிகள் களம் காணவுள்ள நிலையில் அதன் கேப்டன்களாக ஆக யாருக்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தளமாக கொண்ட இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில், லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் கேப்டனாக யாரை நியமிக்க சாத்தியம் உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டேவிட் வார்னர்

நிச்சயமாக, வார்னர் பெரும்பாலான உரிமையாளர்களுக்கான விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பார். ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற அனுபவம் அவருக்கு உண்டு. அவர் 2016 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பட்டம் வெல்ல வைத்தார். தற்போது வார்னரின் மோசமான ஃபார்ம் காரணமாக SRH தரவரிசையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் மீண்டும், அவர் தனது பார்மை பிடித்தால் புதிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படலாம்.

கே எல் ராகுல்

பஞ்சாப் கேப்டன் ராகுல் நல்ல பார்மில் உள்ளார், தகுதி வாய்ந்த அணித்தலைவராக உள்ள அவரை புதிய அணிகள் தங்கள் கேப்டனாக தட்டி தூக்க வாய்ப்புள்ளது.

ஜோஸ் பட்லர்

அணியை வழிநடத்துவதில் அனுபவம் கொண்ட பட்லரை ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி கழட்டிவிட வாய்ப்புள்ளது, இதையடுத்து அவர் புதிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

டெல்லி கேபிடல்ஸ் அஸ்வினை விடுவித்தால், நல்ல அணியை உருவாக்க விரும்பும் இரு புதிய அணிகளுக்கும் அவர் நிச்சயமாக கேப்டனுக்கான தேர்வாக இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE