டெல்லி-கொல்கத்தா… யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி யாருடன் மோதினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி எது என்பதற்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதனால் இந்த இரு அணிகளில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் சென்னை அணிக்கு கொஞ்சம் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதை பார்ப்போம்.

கொல்த்தா

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்ற போது, மோசமாக விளையாடியது.

இந்தணி இனி எங்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போகிறது என்று நினைத்த போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

குறிப்பாக இப்போது இருக்கும் கொல்கத்தா அணியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர் என பக்காவாக உள்ளது. துவக்க வெங்கடேஷ் அய்யர் அல்லது சுப்மன் கில் இருவரின் ஒருவர் சிறப்பாக விளையாடி விடுகின்றனர்.

பவுலிங்கில் பார்த்தால் சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன் மிரட்டி வருகின்றனர். தினேஷ் கார்த்திக் அவ்வப்போது கடைசி கட்டத்தில் மிரட்டலான பேட்டிங் கொடுத்து வருகிறார்.

டெல்லி

கொல்கத்தா அணியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது டெல்லி அணி சற்று மனதளவில் உடைந்து போய் இருக்கிறது என்று சொல்லலாம், ஆரம்பத்தில் பட்டையை கிளப்பிய இந்தணி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த போட்டிகளில், ஆட்டத்தின் கடைசி ஓவர்களிலே தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.பவுலிங்கில் ராபாடா அந்தளவிற்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, மிடில் ஆர்டரிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பூரான் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தணியில் ஷிகார் தவான், ஷா சிறப்பான துவக்கத்தை கொடுத்துவிடுகின்றனர்.

அவ்வளவு தானே தவிர மற்ற படி டெல்லி அணியைப் பொறுத்தவரை இப்போது சற்று சறுக்கலை சந்தித்து வருகிறது.

சென்னை

இந்த இரண்டு அணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், சென்னை அணிக்கு டெல்லி அணி வந்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஏனெனில் டெல்லி அணியை சென்னை பிளே ஆப் சுற்றில் வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சொல்லி கொள்ளும் அளவிற்கு பவுலிங் இல்லை, அதுவே கொல்கத்தாவில் பார்த்தால் சுனில் நரைன், ஷகிப் அல்ஹசன், ஷிவம் மாவி பேட்டிங்கில் வெங்கடேஷ் அய்யர், சுபமன் கில், நிடிஷ் ரானா என ஒரு கடப்பாரை அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE