14 ரயில் சேவைகள் ரத்து

சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான ரயில் மார்க்கத்தின் 6 ரயில் சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர ரயில் மார்க்கங்களின் தலா 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் ரயில் மார்க்கத்தின் 3 ரயில் சேவைகளும், வடக்கிற்கான ஒரு ரயில் சேவையும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE