சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது

நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலை கைது செய்து அம்பாறை பானம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டனர்.

அதில் சட்டவிரோதமாக 38 பேர் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைது ​செய்து கரைக்கு கொண்டுவந்து பான​ம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், 2வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் உள்ளனர்.

மனித கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் என இனங்காணப்பட்ட அறுவர், ஆண்கள் 26 பேர், பெண்கள் ஐவர் மற்றும் சிறுவர்கள் 7 பேரும் அடங்குகின்றனர்.

இதனையடுத்து படகை, கடலில் இருந்து வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.