சிறிலங்காவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனா!

சிறிலங்காவின் நடவடிக்கையை கண்டித்து சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கமத்தொழில் அமைச்சின் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சீனாவின் Qingdao Seawin Biotech Group என்ற பசளை நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இலங்கை தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை வெளியிட்டுள்ள பசளை தொடர்பான அறிக்கையை திருத்திக்கொள்ளவில்லை என்றால், சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் (FAO) உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய போவதாக சீனா எச்சரித்துள்ளது.

இந்த விடயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதுடன் சீன நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு சம்பந்தமான வழக்கின் போது நீதிமன்றம் ஆராய்வதற்காக சீன நிறுவனம் தேவையான ஆவணங்களை சாட்சியங்களாக முன்வைத்துள்ளதாக சீன நிறுவனத்தின் சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் Qingdao Seawin Biotech நிறுவனம் உற்பத்தி செய்யும் சேதனப் பசளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இத்தாலி உட்பட 56 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும் பிரதான தொழில்நுட்ப அதிகாரியுமான Anna Song கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE