பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட பெண்மணி Lubna Jaffery (Ap) நோர்வேயின் புதிய கலாச்சார அமைச்சர்

Lubna Jaffery (Ap- தொழிலாளர் கட்சி) கலாச்சாரம் மற்றும் சமத்துவத்தின் புதிய அமைச்சராகி உள்ளார். பாக்கிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட Lubna Jaffery (Ap) பேர்கனில் முன்னாள் வேலைவாய்ப்பு கவுன்சிலர், முன்னாள் செயல் நகர சபை தலைவர் மற்றும் 2009-2012 வரை கலாச்சார அமைச்சகத்தில் மாநில செயலாளராக பணி புரிந்தவர். தற்போது நோர்வே அமைச்சகத்தில் கட்டுப்பாடு மற்றும் அரசியலமைப்பு குழுவின் உறுப்பினராக உள்ளார். அங்கு அவர் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர் Marte Mjøs Persen உடன் துணை பிரதிநிதியாக உள்ளார். அத்துடன் நோர்வே கலாச்சாரபணிகளில் பெரும் ஈடுபாட்டைக் காட்டியுள்ளார்.

முன்னாள் கலாச்சார அமைச்சர் Anette Trettebergstuen அவர்கள் நோர்வேயின் சாதாரண நெறிமுறை விதிகளை மீறியதாக பிரதம அதிபர் சுட்டிக்காட்டியதன் பின்னர் அவர் ராஜினாமா செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த யூன் 28ம் நாளன்று 43 வயதான Lubna Jaffery (Ap) அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE