பட்ஜெட்டில் உள்ள 18 முக்கிய விடயங்கள்

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் முக்கியமான விடயங்கள்

 

• கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 20,000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும்.

 

• போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை.

 

• மண்ணெண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு மீன்பிடி படகு மீனவர்கள் மற்றும் மின்சார வசதியற்ற பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்.

 

• பொருளாதார நெருக்கடியினைக் குறைக்க சமூக ஸ்திரத்தன்மையை மீள நிர்மாணிக்க 133 பில்லியன் ஒதுக்கீடு.

 

• சமுர்த்தி உதவி பெறும் 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிப்பு.

 

• சமுர்த்தி கொடுப்பனவுகளுக்காக காத்திருக்கும் 726,000 குடும்பங்களுக்கு தற்காலிகக் கொடுப்பனவாக 5,000 ரூபா உதவித் தொகை.

 

• முதியோர் அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாக அதிகரிப்பு.

 

• உதவிக்காக காத்திருக்கும் முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தற்காலிக கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்க நடவடிக்கை.

 

• அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும்.

 

• அரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயது இவ்வருடம் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 ஆக குறைப்பு.

 

• அரசு துறையின் பயன்பாட்டுக்காக எதிர்காலத்தில் மின்வலு கொண்ட வாகனங்கள் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்.

 

• பற்றாக்குறை ஏற்படாதவாறு எதிர்காலத்திலும் தேவையான சமயல் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

 

• 2 ஹெக்ரேயர் அல்லது அதற்குக் குறைந்தளவு நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு, விவசாயக் கடனை (31.05.2022 வரை) மீளச் செலுத்த முடியாத சுமார் 28,259 விவசாயிகளுக்கு கடன் சலுகை.

 

• பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் உயர் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக தனியார் முதலீட்டை ஊக்கவிக்க ஆலோசனை.

• மரக்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் தேயிலை உற்பத்திகளை கொழும்பிற்குக் கொண்டுவர சரக்கு ரயில் சேவையை மேம்படுத்த நடவடிக்கை. ஆரம்ப கட்டமாக, ஹாலி எல – கொழும்பு கோட்டை சேவை ஆரம்பிக்கத் திட்டம்.

 

• புகையிரதத்துறையின் தரம் மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக்காக தனியார் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

• எரிபொருள் பாவனையைக் குறைப்பதற்காக மின்சார துவிச்சக்கர வண்டிகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஊக்குவிப்பு.

• 2022 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை அதிகரிப்பு.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE