மனநிலையை மேம்படுத்தும் உணவுகள்

நின்று நிதானமாக செல்ல முடியாமல் வேகமாக ஓட்டம் பிடிக்கும் இன்றைய அதிவேகமான போட்டி நிறைந்த உலகத்தில் மன அழுத்தம் என்பது பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனையாக உள்ளது.

சந்தோஷமும், மன நிம்மதியும் இருந்தால் தானே அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.

எதை பற்றியுமே சிந்திக்காமல் ஓடிக்கொண்டே இருந்தால் எங்கிருந்து வரும் அமைதி?

நாம் உண்ணும் உணவுகளினாலும் கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆம் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவைகளாலும் கூட அழுத்தங்கள் ஏற்படுகிறது.

அழுத்தம் என்பது பதற்றத்தில் இருந்து தொடங்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய உடல்நல பிரச்சனையாக மாறிவிடுகிறது.

சரி, இந்த மாதிரியான உணர்வுகளை விட்டு மிக வேகமாக வெளியே வந்து, நேர்மறையாக செயல்பட தொடங்க பல வழிகள் இருக்கவே செய்கிறது. அந்த பல வழிகளில் ஒன்று தான் அழுத்தத்தை போக்கும் உணவுகளை உண்ணுவது.

இது உங்கள் மனநிலையையும், உடலையும் சந்தோஷமாக்கும். கேட்க ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் இம்மாதிரியான மோசமான நேரங்களில் இவ்வகையான உணவுகளை உட்கொள்வது நன்மையை அளிக்கும்.

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் வளமையாக உள்ளது. இது நரம்பு தூண்டுதலை உருவாக்க உதவும். இதில் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ளது. இது உங்கள் மனநிலையை சிறப்பாக மேம்படுத்தும்.

வாழைப்பழம்

ஸ்ட்ராபெர்ரிகள் போலவே வாழைப்பழத்திலும் பொட்டாசியம் வளமையாக உள்ளது. இதில் ட்ரிப்டோஃபன் என்ற பொருளும் உள்ளது. இது சந்தோஷமான ஹார்மோனான செரோடொனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதுப்போக, வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படும். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் செலீனியம் மற்றும் மக்னீசியம் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் உங்களுக்கு உடனடியான நல்ல மனநிலையை அளிக்கும் வல்லமையை கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகளில் அமினோ அமிலங்கள் வளமையாக உள்ளது. இது செரோடொனின் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இது நல்ல மனநிலையை உண்டாக்க உதவும் ஹார்மோன் என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

செர்ரி

செர்ரி என்பது உங்கள் மூளைக்கு இதமளிக்கும் இசையை போன்றதாகும். இதில் லைகோபீன் வளமையாக உள்ளது. லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் மூளையில் உள்ள அழற்சியை குறைத்து, மனநிலை ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கும்.

கற்பூரவள்ளி

பிட்சாவிற்கு சுவையூட்ட மட்டும் கற்பூரவள்ளி பயன்படுவதில்லை. அதையும் தாண்டி பல பயன்களை அது கொண்டுள்ளது. இதில் காஃபிக் அமிலம், குவெர்செட்டின் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் உள்ளது. மன அழுத்தத்தை எதிர்த்து இந்த பொருட்கள் சிறப்பாக செயலாற்றும் என்பது அறிந்ததே. உங்கள் புத்துணர்வு அளிக்கவும் உங்களை அமைதிப்படுத்தவும் கூட இது உதவுகிறது.

முட்டைகள்

முட்டையில் ஜின்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரதம் அடங்கியுள்ளது. முட்டையில் உள்ள இந்த பொருட்கள் அனைத்தும் பல்வேறு அளவுகளில் உள்ளது. இது உங்கள் மூளை நடவடிக்கைக்கு நல்லதாகும். மேலும் ஆற்றலை ஊக்குவிக்கவும் செய்யவும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் டிரிப்டோஃபன் வளமையாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் படி, மன அழுத்தம் ஏற்பட்டுள்ள பாதி பேர்களுக்கு ஃபோலேட்டின் அளவு குறையாக இருந்துள்ளது. மறுபுறம், செரோடொனின் உற்பத்திக்கு நம் மூளை டிரிப்டோஃபனை பயன்படுத்தும். இது மனநிலையை சீராக்கும் நரம்பியகடத்துகையாகும்.

தேன்

உடல்ரீதியான ஆரோக்கிய பிரச்சனைகள் என வரும் போது தேன் பல விதத்தில் கை கொடுப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். தேனில் கேம்ப்ஃபெரோல் மற்றும் குவெர்செட்டின் போன்ற பொருட்கள் உள்ளது. இது மூளைக்கு ஏற்பட்டுள்ள அழற்சியை குறைக்கும். இது மன அழுத்தம் ஏற்படுவதை தடித்து, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கவும் தேன் உதவும்.

தேங்காய்

தேங்காயில் மீடியம் செயின் ட்ரிக்லிசெரைட்ஸ் (MCT) உள்ளது. இது நல்ல மனநிலையை உண்டாக்கும் விசேஷ கொழுப்புகளாகும். மேலும் மனித மூளையின் பொதுவான ஆரோக்கியத்திற்கும் இது நல்லதாகும்.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்டில் அனடமைன் உள்ளது. இது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடனடியாக மனநிலை மற்றும் ஆற்றலை ஊக்குவிக்க சாக்லெட் உதவும். இருப்பினும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகமாக உள்ளது. அதனால் அதனை அதிகமாக உண்ணாதீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE