தினமும் ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர்! உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. காரணம் இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும். மணத்தையும் அளிப்பதே ஆகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இதில் பல அற்புத நன்மைகளும் சத்துக்களுக்கு உள்ளன.
பெருங்காய தண்ணீர் செய்ய முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கலாம்.

தற்போது தினமும் பெருங்காய தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

  • பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது. அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தப் பெருங்காயத்தூள் உதவுகிறது. மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது.
  • பெருங்காய தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைப்பதற்கு வெகுவாக உதவுகிறது. நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதய ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் தினமும் காலையில் பெருங்காய தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.
  • மழை மற்றும் குளிர் காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக நமக்குத் தொற்று நோய்கள், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
  • தலைவலி குறைக்கப் பெருங்காயம் உதவுகிறது. எனவே தலைவலி வரும்போது அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெருங்காய தண்ணீரைக் குடிக்கலாம்.
  • மாதவிடாய் பிரச்சனையில் உள்ளவர்களுக்குப் பெருங்காய தண்ணீர் சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. அது மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை சேர்த்து தீர்க்கும்.
  • பெருங்காயத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கலவைகள் உள்ளன. மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இதன் மூலம் இரத்த ஓட்டத்தின் ஆரோக்கியத்திற்கும் இவை உதவுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE