பிரான்சில் கொரோனா தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன

பிரான்சில் கொரோனா தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தரவுகளை Santé Publique France வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை 69,190 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இந்த 24 மணிநேரத்தில் 74,818 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

21,287 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை Santé Publique France வெளியிடவில்லை.

அதேவேளை, 100 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 139,880 பேர் சாவடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE