வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: சுமன் எச்சரிக்கை

தமிழ் நாட்டில் அடிக்கடி அவர் இறந்து விட்டார், இவர் சீரியசாக இருக்கிறார் என்று வதந்தி கிளம்பும், அதே போல ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடிகர் சுமன் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெங்களூரில் படப்பிடிப்பில் இருந்த சுமன் இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். என்னை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் தற்போது பெங்களூருவில் கன்னட படப்பிடிப்பில் இருக்கிறேன். வதந்தி என்று அறியாமல் எனது நலம் குறித்து அக்கறையோடு விசாரித்த நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும் எனக்கு தெரிந்த சில வழிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறேன். இனி யார் என்னை பற்றி வதந்தி கிளப்பினாலும் அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு சுமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.