கருணாஸின் ஆதார் செப்டம்பர் 22ல் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆதார். ராம்நாத் பழனிக்குமார் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் இனியா, ரித்விகா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஒரு அப்பாவித்தனமான வேடத்தில் நடித்திருக்கும் கருணாஸ், போலீசில் சிக்கிக் கொண்டு எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதை மையமாகக் கொண்ட கதையில் ஆதார் படம் உருவாகி இருக்கிறது.

வெண்ணிலா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் செப்டம்பர் 22ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE