மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த நாட்டாமை

சினிமாவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நீண்ட நாட்கள் வெற்றிகரமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் நடித்த ‘நாட்டாமை’ கதாபாத்திரத்தையும், கம்பீரமான குரலையும் யாரும் மறக்க முடியாது. தங்கம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்த விஜயகுமார் தொடர்ந்து வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பெரிதாக திரையில் தோன்றாத விஜயகுமார் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி இரண்டாவது சீசனில் மீண்டும் நாட்டாமை கெட்டப்பில் விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார். பார்ப்பதற்கு செம கெத்தாக இருக்கும் நம்ம நாட்டாமை யாருக்கு என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE