ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் இப்படி தான் இருக்கும்.. இசையமைப்பாளர் இமான் பேட்டி

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று தேசிய விருது வென்ற கையுடன் செய்தியாளர்களை சந்தித்த டி. இமான் அண்ணாத்த படம் குறித்து பேசினார். இதில் ” தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த படம், மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE