விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் தேர்தல் பேரணியின் போது மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தமை மற்றும் 2009 மார்ச் 13ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் தேவாலய விழா ஒன்றில் தற்கொலை குண்டுதாரி மூலம் அமைச்சர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 46 பேரை படுகொலை செய்யவும், அன்றைய ஜனாதிபதியை வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளில் உள்ளன.