இலங்கையில், இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்றைய தினம் (06-03-2022) திட்டமிட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்படாது அல்லது குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.