கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் Covid-19 தொற்றால் 321 பேர் பாதிக்கப்பட்டதோடு 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17 இலட்சத்து 4ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28ஆயிரத்து 851 பேர் மரணமடைந்துள்ளனர். கனடாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 25ஆயிரத்து 895 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 765 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16இலட்சத்து 49 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.