நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற விடுமுறைக் காலம் நீடிக்கப்படுவதை கருத்திற்கொண்டு, 5 ஆம் திகதியே நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள வளாகங்களை மீள பெறுவதற்கான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE