ரணிலின் பட்ஜெட்டுக்கு இம்தியாஸின் விமர்சனம்

பேசும் விடயங்களில் உண்மையிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தினூடாக 61,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

எனினும் உலக உணவுத்திட்டம் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது .

இந்தநிலையில் , 61,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டார் .

அதே போன்று பிரதமராக இருந்தபோது காலிமுகத்திடல் போராட்டம் தொடர வேண்டும் என்று அதற்கு தாம் ஆதரவு என்று தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்கியதாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published.