கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வாக்களிப்பு

இடைக்கால ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெறுகின்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பெயர் அழைக்கப்பட்டது.

அப்போது, அவருக்கு உதவிச் செய்யுமாறு தெரிவித்தாட்சி அதிகாரியான நாடாளுமன்ற செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர், சபை உதவியாளர்கள் மூவர், சம்பந்தனின் ஆசனத்துக்கு அருகில் சென்று, அவரை கைத்தாங்கலாக அழைத்துவந்தனர். வாக்குச் சீட்டையும் தெரிவத்தாட்சி அதிகாரி எழுந்துநின்று வழங்கினார்.

அதன்பின்னர், வாக்கை இடும் கூடாத்துக்குள்ளும் அம்மூவரும் கைதாங்கலாகவே சம்பந்தனை அழைத்துச் சென்று வாக்குப் பெட்டிக்கு அருகில் ​அழைத்துவந்தனர்.​ வாக்குச் சீட்டை பெட்டியினுள் இட்டதன் பின்னர், கைதாங்கலாகவே அவரை, அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.