நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவிக்கையில்.

நாட்டில் மத ,ஊடக சுதந்திரம் இருக்கின்றது.கருத்து சுதந்திரம் இருக்கின்றது.பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது.அரசியல் , பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும்.நாட்டின் தலைவர் ஒருவர் , பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு இலக்கை நோக்கி செயற்படுவது இலக்கல்ல. சில சமயம் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எமக்கு எதிராக செயற்படுகின்றன.மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும் ,  நாட்டின் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், சிறந்த நிலைப்பாடுகளால் நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

புதிய உலகத்துடன் நாம் போட்டியிட வேண்டுமானால் நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடினமான காலம் என்றென்றும் நீடிக்காது, கடினமான காலங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. அதனால் மற்றவர்களை மனதளவில் புண்படுத்தும் யாரும் சமுதாயத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை. நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நீண்ட கால பிரச்சனைகள் அல்ல.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென கூறப்பட்டது. ஆனால் நாங்கள் வென்றோம். நாங்கள் எமது சவால்களை வெல்ல திடசங்கற்பம் பூண வேண்டும். அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்யவேண்டும். நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது. கடந்த காலங்களில் சவால்கள் சமாளிக்கப்பட்டது போன்று அடுத்த வருடங்களிலும் நாம் சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE