பிரதமர் இம்ரான் கான் – பந்துல சந்திப்பு !

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இந்த சந்திப்பின் ​போது தெரிவித்ததாக வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்பிற்கு வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE