![இலங்கையர் கொலை – காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு சிறை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/3-priyanth.jpg?fit=696%2C742&ssl=1)
இலங்கையரான பிரியந்த குமாரவை கொலை செய்யும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அட்னன் என்ற குறித்த சந்தேகநபர் முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.