தினமும் ஒரு துண்டு தேங்காய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

சமையலறையில் இருக்கும் பொருள்களில் பலருக்கு பிடித்த ஒன்று தான் தேங்காய். கேட்பதற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இனிப்புச் சுவையான இந்த தேங்காயில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. இதனால் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சரி வாங்க தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும். தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் இந்த நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • இளநீர் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையை சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும்.
  • ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது. தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப்பயன்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published.