குருதி தட்டுப்பாடு – யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் இரத்த வாங்கி அறிவித்தட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால், தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இரத்த வங்கி காணப்படுகின்றது. இருக்கின்ற குருதியும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதும். அதன் பின்பு ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்திற்களுக்கோ, சத்திர சிகிச்சைகளுக்கோ, மகப்பேற்று சத்திர சிகிச்சைகளுக்கோ, குருதிச்சோகை நோயாளர்களுக்கோ மற்றும் ஏனைய நோயாளர்களுக்கோ குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலைக்கு இரத்த வங்கி தள்ளப்பட்டுள்ளது.

இரத்ததானம் செய்வது தொடர்பாக 0212223063 , 0772105375 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.