கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இலங்கை தமிழர்! வெளியான புகைப்படம்

கனடா பொது தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான Gary Anandasangaree நாடளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கனடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree 16051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Scarborough—Rouge Park தொகுதியில் இருந்து Gary Anandasangaree வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் Gary நேற்று பதவி பிரமாணம் ஏற்று கொண்டார்.இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், மூன்றாவது முறையாக Scarborough—Rouge Park தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.

Scarborough – Rouge Park இல் வசிப்பவர்களுக்கு சேவை செய்து அயராது உழைப்பதை தொடர்வேன்.

உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்பதை உறுதி செய்வேன் என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE