இந்தியாவில் ஒரே நாளில் 3,545 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 3,275 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 3,545 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,94,938 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 55 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,002 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரே நாளில் 3,549 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,51,248 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 1,89,81,52,695 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 16,59,843 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE