தயாரிப்பாளர் ஆன ரம்யா

கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து படத்தில் சிம்புவுடன் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்பட சில படங்களில் நடித்தார். கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். அதன்பின் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடைசியாக கோடி ராமகிருஷ்ணா இயக்கிய நாகரகாவு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ரம்யா 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இந்த முறை அவர் நடிகையாக வரவில்லை. தயாரிப்பாளராக வந்திருக்கிறார். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆப்பிள் பாக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதோடு படப்பிடிப்புக்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.