சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த இளையராஜா!

சமீபத்தில் ராஜ்யசபா எம்பி ஆன இசையமைப்பாளர் இளையராஜா, தற்போது விடுதலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு வெளிநாடுகளுக்கு சென்றும் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹங்கேரியில் நடக்கும் இசை கச்சேரிக்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார் இளையராஜா.

அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படும் என்பதால் அதற்கு முன்னதாகவே அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து விட்டார். ஆனால் நேற்று இரவு பலத்த மழை பெய்ததின் காரணமாக விமானங்கள் புறப்படுவது மற்றும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

குறிப்பாக, சென்னையில் தரையிறங்க இருந்த விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் என்று மற்ற விமான நிலையங்களில் தரை இறக்கப்பட்டன. இதன் காரணமாக இளையராஜா துபாய்க்கு செல்ல இருந்த விமானமும் தாமதமானது.

அதன் பிறகு ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் மேலும் 3 மணி நேரம் தாமதமாகும் என்று விமான நிலையம் அறிவித்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக இருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக்கப்பட்டது. இப்படியாக 7 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து விட்டு அதன் பிறகு துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார் இளையராஜா.

Leave a Reply

Your email address will not be published.