‘திருச்சிற்றம்பலம்’ – தனுஷ், அனிருத் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாரி, தங்க மகன்’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த மூன்று படங்களில் ‘3, மாரி’ ஆகிய படங்களின் பாடல்கள்தான் சூப்பர் ஹிட்டாகின. இருந்தாலும் ‘டிஎன்எ’ காம்போ என ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.

இருப்பினும் கடந்த ஏழு வருடங்களாக தனுஷ், அனிருத் கூட்டணியில் எந்தப் படமும் வரவில்லை. இக் கூட்டணியின் நான்காவது படமாக நேற்று வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் அமைந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு அனிருத் ‘டிஎன்ஏ’ என்பதை மட்டும் பதிவு செய்து தனுஷை டேக் செய்து, இருவரும் கட்டிப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதை ரி-டுவீட் செய்து தனுஷும் ஹாட்டின் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.