இறந்த பின் அழாதீர்கள், இருக்கும்போது உதவுங்கள்: எலிசபெத்

சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் எலிசபெத் சுராஜ். கனா காணும் காலங்கள். அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது போதிய வாய்ப்பு இன்றி தவிக்கும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:

சினிமாத்துறை , தொலைகாட்சி துறை அன்பர்களுக்கு, எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகருக்கு தராதீர்கள். நான் மூழ்கி கொண்டிருக்கிறேன். மரணித்த பின் எனக்காக அழ வேண்டாம். இரங்கல் கடிதம் எழுத வேண்டாம். நான் உயிரோடு இருக்கும்போது உதவி கரம் நீட்டுங்கள். பிழைத்து கொள்வேன் .

நான் சார்ந்த சங்கங்களின் உயர் பதவியில் உள்ளவர்கள் கேட்க தவறியதை நான் கேட்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. என் போன்ற நிறைய நடிகர்களுக்காகவும் ஒலிக்கும் என் குரல். நான் கரை ஏறிய பின் அநேகருக்கு கரம் கொடுப்பேன். என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.