உலகளவில் திரைக்கு வரும் முகை- Section 360

முகை- Section 360 – சென்னையில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக Rapido பைக் ஓட்டி வாழ்ந்துவரும் இலங்கை வாலிபனுக்கும், தன் பிறப்பின் ரகசியம் தேடிக்கொண்டிருக்கும் தமிழக யுவதிக்கும் உண்டாகும் காதலை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் தமிழ் திரைப்படம் .

இலங்கையை தாயகமாக கொண்ட சுஜன் கிறிஷான் கதாநாயகனாக அறிமுகமாகும் இத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மிஸ் டிரான்ஸ்குயின் 2021 விருதுபெற்ற திருநங்கை ஷனா ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இவர்களுடன் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் ப்ரியமதா பயஸ் இணைவசனம் எழுதி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடிக்கிறார்.

இவர்களுடன் மகேஷ், முத்துக்குமாரசாமி, காந்தராஜ், அனிதா, விஜய அரவிந்த ஹரி இவர்களும் நடிக்கின்றனர்.

ஜோஷ்வா மெல்வின் இசையமைக்க, டேவிட் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்ய நாடன் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
கலை – ரவி, மேக்கப்- பாரதி, தயாரிப்பு நிர்வாகம்- தேவி முருகன்

நான் ,மீடியா பெருமையுடன் வழங்கும் “முகை section -360 ” திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் N.சுபத்ரா S .
கதை திரைக்கதை வசனம் பாடல்களுடன் இத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ நாகா. விரைவில் திரைக்கு வர இருக்கிறது இத் திரைப்படம் இந்தியா ,இலங்கை ,மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் திரைப்படவுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE