துல்கர் சல்மானின் அக்கவுண்ட் ஹேக்

திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் இன்றய காலத்தில் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டா அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நேற்று இரவு எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது . அதிர்ஷ்டவசமாக நான் அதை மீட்டிவிட்டேன். ஆனால் உங்கள் யாருக்காவது உங்கள் உள்நுழைவுத் தகவலை(லாக் இன்) கேட்கும் இணைப்புகளுடன் என்னிடமிருந்து செய்திகள் வந்திருந்தால், தயவுசெய்து செய்வதை தவிர்க்கவும்” என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE