விஜய் பாடலுக்கு இசையமைக்கும் பரத்வாஜ்

இயக்குனர் சரண் இயக்கிய அஜித்தின் காதல் மன்னன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் பரத்வாஜ்.. தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பரத்வாஜ், அஜித்தின் அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட ஐந்து படங்களுக்கும், கமல், விக்ரம் ஆகியோரின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

அதேசமயம் பீக்கில் இருந்த அந்த சமயத்தில் இருந்து இப்போதுவரை விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. இந்தநிலையில் விஜய் மக்கள் நற்பணி இயக்கம் உருவாக்கும் தீ..தீ..தளபதி என்கிற பாடலுக்கு இசையமைத்துள்ளார் பரத்வாஜ். அந்தவகையில் அவர் விஜய்க்காக இசையமைக்கும் முதல் பாடல் என்று இதை சொல்லலாம். ஜனனி, கார்த்திக் இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர். கனடாவில் உள்ள விஜய் ரசிகர்கள் தங்கள் சார்பாக, விஜய்க்கு தங்கள் காணிக்கையாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE