சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு முன்னெடுக்கப்படுமென நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.