எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தட்டுபாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 22 மில்லியன் டொலர் தேவையாக இருந்ததாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரையில் அத்தியாவசிய மற்றும் அவசர மருந்து பொருட்கள் 14ல் 9 மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.