நடிகர் சங்கத்திற்கு 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் தேர்வானார்கள்.

இவர்கள் தவிர்த்து 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் விஷால் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகை குஷ்பு 1407 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். 1339 வாக்குகள் பெற்ற கோவை சரளா 2வது இடத்தையும், 1384 வாக்குகள் பெற்ற ராஜேஷ் 3வது இடத்தையும் பெற்றார்.

செயற்குழு உறுப்பினர்களாக தேர்வான மற்றவர்கள் வருமாறு: மனோபாலா, அஜய்ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், லதா, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், ஸ்ரீமன், ஜெரால்டு, ரத்தன்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE