நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இரண்டரை மணிநேரம் மின்சாரம் தடைப்படவுள்ளது.
இதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய A.B மற்றும் C வலயங்களில் மாத்திரம் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
ஞாயிற்று கிழமை என்பதால் இன்றைய தினம் பகல் வேளையில் 1,650 மெகாவொட் மின்சார தேவை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் மாலை வேளையில் 1,550 மெகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் இரவு வேளையில் 2, 350 மெகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் நிலவும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.