ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு ஆளாகாமல், தகுதியானவர்கள் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.